பிளாஸ்டிக் கயிறு வருகை போன்ற காரணத்தால், பொள்ளாச்சியில் நலிவடைந்து வரும் தென்னைநார் கயிறு உற்பத்தி; உற்பத்தியாளர்கள் வேதனை

பொள்ளாச்சி: தென்னை நார் விலை உயர்வு, பிளாஸ்டிக் கயிறு வருகை போன்ற காரணத்தால், பொள்ளாச்சி தென்னைநார் கயிறு உற்பத்தி தொழில் பெரும் பாதிப்பு அடைந்துள்ளதாக, உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பொள்ளாச்சி: தென்னை நார் விலை உயர்வு, பிளாஸ்டிக் கயிறு வருகை போன்ற காரணத்தால், பொள்ளாச்சி தென்னைநார் கயிறு உற்பத்தி தொழில் பெரும் பாதிப்பு அடைந்துள்ளதாக, உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 



பொள்ளாச்சி அருகே உள்ள கப்பலங்கரை, தாமரைக் குளம், வடக்கிபாளையம் போன்ற கிராமப்பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தென்னை நார் மூலம் கயிறு உற்பத்தி செய்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். இதில், தாமரைகுளம் பகுதியில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தென்னைநார் கயிறு உற்பத்தி தொழிலை நம்பியே இருந்து வருகின்றனர். பொதுவாக, குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து இந்த கயிறு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். 



இந்நிலையில், ஆறுமாத காலமாக ஊரடங்கு, தென்னை நார் விலை உயர்வு, பிளாஸ்டிக் கயிறு வருகை அதிகரிப்பு போன்ற காரணத்தால் தென்னைநார் கயிறு உற்பத்தி தொழில் நலிவடைந்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



காலங்காலமாக, தென்னைநார் கயிறு உற்பத்தி ஈடுபட்டுவரும் தங்களுக்கு 30 கிலோ கொண்ட தென்னைநார் 600 ரூபாய் கிடைத்து வந்த நிலையில், தற்போது 1,000 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. இதனால், தென்னைநார் கயிறு மூலம் முன்பு போல் வருமானம் கிடைப்பதில்லை என உற்பத்தியாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், தற்போது பொள்ளாச்சி பகுதியில் மழை காரணமாக தென்னை நார் ஈரப்பதமாக உள்ளதால், உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

மேலும், ஊரடங்கு கட்டுபாடுகளால் கோவில் விழாக்கள், அரசியல் கட்சி நடத்தும் விழா, பெரிதாக நடக்காத காரணத்தால் கயிறு விற்பனையும் மந்தமாகி இருப்பதால், கடந்த ஆறு மாதமாக நலிவடைந்து வரும் தென்னைநார் கயிறு உற்பத்தி தொழிலை, காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...