கோவை: பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், கோபினாரி பிரிவு, கோபினாரி கிழக்கு பீட்டிற்கு வெளியில் காலனிபுதூர் என்ற வருவாய் பழங்குடியின கிராமம் உள்ளது.

அதன் அருகில் உள்ள பட்டா நிலத்தில், நேற்று மதியம் சுமார் 11.00 மணியளவில், ஒரு புள்ளிமான் குட்டியை, தெருநாய்கள் துரத்திப் பிடித்து, கடித்து சாப்பிட்டு கொண்டிருந்ததை, அப்பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள் பார்த்தனர். அதைப்பார்த்த அவர்கள், அந்த நாய்களை துரத்தி விட்டு, அந்த மான் கறியை வெட்டி கூறு போட்டு, எடுத்துச் சென்றுள்ளனர்.
தகவலறிந்த, பெ.நா பாளையம் வனச்சரகம், கோபினாரி பிரிவு வனவர், மதுசூதனன், கோபிநாரி கிழக்கு சுற்று வனக்காப்பாளர், அண்ணாமலை, வனக்காவலர், ராதாகிருஷ்ணன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர், அங்கு சென்று விசாரணை செய்தனர்.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட மூவரையும் பிடித்து, அவர்கள் கூறு போட்டு எடுத்துச்சென்ற மான் கறியை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து,வ் பெ.நா. வனச்சரக அலுவலர், செல்வராஜ் தலைமையிலான குழுவினர், அந்த பகுதியை தணிக்கை செய்து, தீவிர விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையை அடுத்து, மூவர் மீதும் வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றத்தில் ஈடுபட்ட மேட்டுப்பாளையம் தோலாம்பாலயத்தை சேர்ந்த கோபால் (வயது 32), அதே பகுதியை சேர்ந்த குருந்தா ஜலம் (36). கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த முருகன் (36), ஆகியோரை கைது செய்தனர். பின்னர், குற்றவாளிகளுக்கு தலா ரூ 10,000 வீதம், மொத்தம் ரூ 30,000 அபராதமும் விதிக்கப்பட்டது.