கோவையில் தெரு நாயிடமிருந்து மான் கறியை பறித்துச் சென்ற 3 பேர் கைது

கோவை: பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், கோபினாரி பிரிவு, கோபினாரி கிழக்கு பீட்டிற்கு வெளியில் காலனிபுதூர் என்ற வருவாய் பழங்குடியின கிராமம் உள்ளது.

கோவை: பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், கோபினாரி பிரிவு, கோபினாரி கிழக்கு பீட்டிற்கு வெளியில் காலனிபுதூர் என்ற வருவாய் பழங்குடியின கிராமம் உள்ளது. 

அதன் அருகில் உள்ள பட்டா நிலத்தில், நேற்று மதியம் சுமார் 11.00 மணியளவில், ஒரு புள்ளிமான் குட்டியை, தெருநாய்கள் துரத்திப் பிடித்து, கடித்து சாப்பிட்டு கொண்டிருந்ததை, அப்பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள் பார்த்தனர். அதைப்பார்த்த அவர்கள், அந்த நாய்களை துரத்தி விட்டு, அந்த மான் கறியை வெட்டி கூறு போட்டு, எடுத்துச் சென்றுள்ளனர். 

தகவலறிந்த, பெ.நா பாளையம் வனச்சரகம், கோபினாரி பிரிவு வனவர், மதுசூதனன், கோபிநாரி கிழக்கு சுற்று வனக்காப்பாளர், அண்ணாமலை, வனக்காவலர், ராதாகிருஷ்ணன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர், அங்கு சென்று விசாரணை செய்தனர். 

இந்த குற்றத்தில் ஈடுபட்ட மூவரையும் பிடித்து, அவர்கள் கூறு போட்டு எடுத்துச்சென்ற மான் கறியை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து,வ் பெ.நா. வனச்சரக அலுவலர், செல்வராஜ் தலைமையிலான குழுவினர், அந்த பகுதியை தணிக்கை செய்து, தீவிர விசாரணை நடத்தினார்கள். 

விசாரணையை அடுத்து, மூவர் மீதும் வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றத்தில் ஈடுபட்ட மேட்டுப்பாளையம் தோலாம்பாலயத்தை சேர்ந்த கோபால் (வயது 32), அதே பகுதியை சேர்ந்த குருந்தா ஜலம் (36). கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த முருகன் (36), ஆகியோரை கைது செய்தனர். பின்னர், குற்றவாளிகளுக்கு தலா ரூ 10,000 வீதம், மொத்தம் ரூ 30,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...