கோவையில் குடிபோதையில் இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபர் கைது..!

கோவை: கோவை ராமநாதபுரம் கொங்கு நகரைச் சேர்ந்த 37 வயது பெண், அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணி புரிந்து வருகிறார்.


கோவை: கோவை ராமநாதபுரம் கொங்கு நகரைச் சேர்ந்த 37 வயது பெண், அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணி புரிந்து வருகிறார்.

இவர் நேற்று இரவு ஆஸ்பத்திரியில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் திடீரென அந்த இளம்பெண்ணின் அருகே வந்து கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட்டார்.

அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால், அதற்குள் அந்த நபர் அந்த பெண்ணை தள்ளிவிட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர், அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதுகுறித்து அந்த பெண் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நபர், ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த காமேஸ்வரன் (வயது 24), என்பதும் பெயிண்டர் வேலை செய்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

விசாரணையில், இவர் குடிபோதையில் அந்த இளம்பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...