பாஜகவில் இருந்து அர்ஜுன மூர்த்தி ராஜினாமா..! ரஜினி கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆனார்

கோவை: பாஜகவில் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி நேற்று மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் இடம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை முறைப்படி சமர்ப்பித்தார். இந்த நிலையில், இன்று ரஜினி பேட்டியின்போது தனது கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார், என கூறினார்.


கோவை: பாஜகவில் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி நேற்று மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் இடம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை முறைப்படி சமர்ப்பித்தார். இந்த நிலையில், இன்று ரஜினி பேட்டியின்போது தனது கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார், என கூறினார்.

பேட்டி நடந்து கொண்டிருக்கும் போது பாஜக மாநிலச் செயலாளர் கரு. நாகராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அர்ஜுன மூர்த்தி ராஜனாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும், அவரிடம் கட்சியினர் கட்சி சார்பாக எந்த தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் அவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுகிறார் எனக் கூறியிருந்தார்.

ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சி தொடங்கயிருப்பதாக நடிகர் ரஜினி அறிவித்திருக்கும் நிலையில், அவரது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று அறிவிக்கப்பட்ட அர்ஜூன் மூர்த்தி பாஜகவிலிருந்து விலகினார். ரஜினி தொடங்கவிருக்கும் அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அர்ஜூன் மூர்த்தி, பாஜகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்துள்ளார்.

இது குறித்து பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் அர்ஜூன் மூர்த்தியுடைய ராஜினாமாவை ஏற்று அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார்.

மேலும், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம், கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வரும் ஜனவரி மாதத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும், கட்சி தொடங்கும் தேதியை டிசம்பர் 31-ம் தேதி அறிவிக்கப் போவதாகவும் ரஜினி அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, தனது அரசியல் கட்சி மற்றும் தனது இலக்கு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று அர்ஜூன் மூர்த்தியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அர்ஜூன் மூர்த்தி, முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர். முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு திமுகவிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...