கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் குனியமுத்தூர் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளை, ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குனியமுத்தார் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் அப்பகுதிகளைச் சுற்றி உள்ள வயல் வரப்புகளில் நீீர் நிரம்பி வழிந்தோடியது. மேலும், அப்பகுதியில் செங்குளம் இருப்பதால், சுண்டக்காமுத்தூர் மெயின் ரோடு, கங்கா நகர், ஜே.பி.நகா், லட்சுமி நகர், வெற்றித்திருநகர், ஆதித்யா கார்டன் ஆகிய பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து காணப்பட்டது.

இப்பகுதிகளை இன்று மாநகராட்சி ஆணையருடன் பார்வையிட்ட, அமைச்சர், அங்கு தேங்கியுள்ள நீரை வெளியேற்ற ஜென்செட் மற்றும் நீர் உறுஞ்சும் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைக் தொடர்ந்து, லட்சுமி நகர் பகுதியில் குடிநீர் இணைப்பு வேண்டும் என தெரிவித்த பொதுமக்களுக்கு இணைப்பு வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பொது குடிநீர் குழாய் இணைப்பு வேண்டிய இடங்களில் இணைப்பு பொருத்தி தருமாறும் மாநகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.87 ஆதித்பா கார்டன் பகுதியில், குறிஞ்சி நகர் பகுதியில் சேரும் மழை நீரை புட்டூவிக்கி கால்வாயில் இணைக்க குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜையினை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
இவ்வாய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி துணை ஆணையாளா் எஸ்.மதுராந்தகி, மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், தெற்கு மண்டல உதவி ஆணையர் டி.ஆர்.ரவி, உதவிப் பொறியாளா்கள், தெற்கு மண்டல சுகாதார அலுவலர் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனர்.