ஆர் எஸ் புரம் பகுதியில்‌ 24 மணி நேர குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை முறையாக சமன் செய்து சீரமைக்க வேண்டும் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை: கோவை மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஆர்‌.எஸ்புரம்‌, வெங்கிடசாமி சாலை, பொன்னுரங்கம்‌ சாலை, பெரியசாமி சாலை, திருவேங்கடசாமி சாலை, தடாகம்‌ சாலை ஆகிய பகுதிகளில்‌ 24 மணி நேர குடிநீர்‌ வழங்கும்‌ திட்டப்‌பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்,‌ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஆர்‌.எஸ்புரம்‌, வெங்கிடசாமி சாலை, பொன்னுரங்கம்‌ சாலை, பெரியசாமி சாலை, திருவேங்கடசாமி சாலை, தடாகம்‌ சாலை ஆகிய பகுதிகளில்‌ 24 மணி நேர குடிநீர்‌ வழங்கும்‌ திட்டப்‌பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்,‌ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சாலையோரங்களில்‌ குப்பைகளை கொட்டாமல்‌ குப்பைத்தொட்டிகளில்‌ மட்டுமே கொட்ட வேண்டும் என்று அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு

வேண்டுகோள்‌ விடுத்தார். பின்னர்‌, அப்பகுதி பொதுமக்களிடம்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணியவேண்டும்‌, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்‌ என்று அறிவுறுத்தினார்.



ஆய்வின் போது, குடிநீர் குழாய்‌ பதிக்கும்‌ பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அப்பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை முறையாக சமன் செய்து சீரமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். சாலைகளை சீர் செய்யும் பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய மாநகராட்சி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள உணவகங்கள்‌ மற்றும்‌ சாலையோர கடை உரிமையாளர்களிடம்‌ சாலை ஓரங்களில்‌ குப்பைகளை கொட்டாமல்‌, மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களிடம்‌ வழங்கி, தங்கள்‌ பகுதிகளை தூய்மையாகவும்‌, சுகாதாரமாகவும்‌ வைத்திருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல உதவி ஆணையர்‌ அ.ஜெ.செந்தில்‌அரசன்‌, செயற்பொறியாளர்‌ (24/7 குடிநீர்‌ திட்டம்‌) பார்வதி, உதவி

செயற்பொறியாளர்‌ செந்தில்பாஸ்கர்‌, உதவிப் பொறியாலர்கள், கமலக்கண்ணன்‌, சத்தியமூரத்தி, திட்ட மேலாண்மை ஆலோசகர்‌ குழுத்தலைவர்‌

கோபாலகிருஷ்ணன்‌, மற்றும்‌ பணி மேற்பார்வையாளர்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌, சூயஸ்‌ நிறுவனத்தினர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...