நீலகிரியில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிப்பு. அதிக மழையை சமாளிக்க தயார் நிலை..! - ஆட்சியர் அறிவிப்பு..!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலை ஊராட்சியில் உலக மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் இன்று நடைப்பெற்றது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலை ஊராட்சியில் உலக மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் இன்று நடைப்பெற்றது. 



நிகழ்ச்சியின் போது, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் கொரோனா தோய்த் தொற்று காலத்தில், சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் என 10 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், 15 பயனாளிகளுக்கு 1,27,681 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் கிண்டர் டிரஸ்ட் சார்பில் தையல் பயிற்சி பெற்ற 15 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை, ஆட்சியர் வழங்கினார்.



பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், இன்னசென்ட் திவ்யா கூறுகையில்: நீலகிரி மாவட்டம் புயல் தாக்க பாதையில் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கடந்த நிவர் புயலுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. அதிக மழை மற்றும் பலத்த காற்று இருந்தால் இரண்டு நாட்களுக்கு பொது மக்கள் வெளியில் வர வேண்டாம், என அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார். 

இந்நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் ரஞ்சித்சிங், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...