உயிரே போனாலும் பரவாயில்லை தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது - ரஜினி பரபரப்பு பேட்டி

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று ரசிகர்களால் கொண்டாப்படும் ரஜினிகாந்த், எப்பொழுது அரசியல் கட்சியை அறிவிப்பார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று ரசிகர்களால் கொண்டாப்படும் ரஜினிகாந்த், எப்பொழுது அரசியல் கட்சியை அறிவிப்பார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். 



இந்நிலையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என அதற்கு முன்பாக கட்சி தொடங்கப்படும் என கூறியிருந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் கருத்தில் கொண்டு கொசோனாவை கருத்தில் கொண்டும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில் இன்று அவர் ட்விட்டர் பதிவில் 31 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும். ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என பதிவிட்டிருந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்த ரஜினிகாந்த், கொடுத்த வாக்கை கண்டிப்பாக காப்பாற்றுவேன். பல்வேறு விதமான காரணங்களால் அரசியல் கட்சி தொடங்குவது தள்ளி போய் கொண்டிருந்தது. இந்த நிலையில், இப்போது அரசியலில் இறங்க வில்லை என்றால் எப்பொழுது இறங்க முடியும்? என்றும், டாக்டர்கள் உடைய அறிவுரையின்படியும், உயிரே போனாலும் பரவாயில்லை என அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளேன், என்று தெரிவித்துள்ளார். 

அறிவித்தது போல், ஜனவரியில் கட்சி தொடங்கப்படும். கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவிமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை ஒருங்கிணைப்பாளராக மூர்த்தி செயல்படுவார். தேர்தலில் நான் வெற்றி பெற்றால், அது மக்களின் வெற்றி. அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் அதற்கான நாள் வந்துவிட்டது, என்றார். 

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்று பணம் செய்வது ஆபத்து என டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கியுள்ளேன். அரசியல் மாற்றம் தேவை அது கட்டாயம், தமிழகத்தில் நிகழும், என்று தெரிவித்தார். 

மேலும், இப்ப இல்லை என்றால் எப்போதுமே இல்லை என ரஜினிகாந்த் உருக்கமாக தெரிவித்தார். 

இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2017ஆம் ஆண்டு "நான் அரசியலுக்கு வருவது உறுதி" என்று கூறி, நீண்ட நாட்களாக ரஜினியின் அரசியல் வருகைக்காக காத்திருந்த ரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்தார் ரஜினி, அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் சட்டமன்றத் தேர்தலே தனது பிரதான இலக்கு எனவும், எம்ஜிஆர் ஆட்சியை தன்னால் தர முடியும் என்றும் கூறி அதிரடி காட்டினார். 

இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்தின் அரசியல் கட்சி எப்போது தொடங்கும் என அவரது ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து தவமாய் காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை எனவும், கொரோனா தொற்று காரணமாக அவர் அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டார் எனவும் தகவல்கள் வெளியானது. இதனால், அவரது ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் 38 பேருக்கும் சென்னை வரும்படி ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தார். அவரின் இந்த முடிவு தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியது. 

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரஜினி தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசியல் நிலவரம், கொரோனா களப்பணி முதலியவை குறித்து நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் கேட்டிருந்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் எனது முடிவை அறிவிப்பேன் என்றார். இதனால், ரஜினியின் அரசியல் நிலைப்பாடு பற்றிய அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என அவரது ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடியாக, ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31-ல் தேதி அறிவிப்பு என பதிவிட்டுள்ளார். மேலும், மாற்றுவோம்... எல்லாத்தையும் மாற்றுவோம்... இப்போ இல்லன்னா.. எப்பவும் இல்ல. வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான நாணயமான வெளிப்படையான ஊழலற்ற ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியலை உருவாக்குவது நிச்சயம். அற்புதம்... அதிசயம் நிகழும்..!!! என பதிவிட்டுள்ளார். 

அவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் அளவற்ற உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் அரசியல் வருகை கானல் நீராகி விட்டது என கூறி வந்தவர்களுக்கு அவரின் இந்த முடிவு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...