டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு..! திருப்பூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்

திருப்பூர்: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியில் தொடர்ந்து விவசாயிகள் 8 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், மத்திய அரசின் மூன்று புதிய விவசாய சட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் பயன் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைநகர் டெல்லி எல்லையில் போராடி வருகின்றனர்.

புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற கோரி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக, இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். அதன்படி, இன்று திருப்பூர்  ரயில் நிலையம் முன்பாக உள்ள மத்திய தபால் நிலையத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும் , வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...