டெல்லி விவசாயிகள் போராட்டம்: திருப்பூரில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியினர் ஆதரவு..!

திருப்பூர்: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியினர் சார்பில் இன்று டிசம்பர் 3 ஆம் தேதி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர்: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியினர் சார்பில் இன்று டிசம்பர் 3 ஆம் தேதி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  



மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற  வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து 8வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாயி அமைப்புகள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தொழிற் சங்கங்கள் போராடி வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பஞ்சாப் மற்றும் ஹரியானவை சேர்ந்த விவசாயிகள் தலை நகர் டெல்லியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் மத்திய அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். 

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...