பொள்ளாச்சி: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி காலனியை சேர்ந்தவர் மணிகண்டன், சாரதா தம்பதியரின் மகள் தாரணி, காவ்யா, மகன், ஜெகதீஷ். (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் ரபீக் அகமது, சபிதா பீவி தம்பதியரின் பேரன் அகிய நான்கு பேரும், நேற்று மாலை வீட்டின் அருகே ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

நேற்று, இரவு 7 மணியளவில் குல குழந்தைகளை காணாததால், பெற்றோர் பதற்றம் அடைந்தனர். பின்னர், பெற்றோர்கள் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும் குழந்தைகள் கிடைக்காததால், அதிர்ச்சியடைந்தனர். மேலும், குழந்தைகள் மாயமான சம்பவத்தை அறிந்த அப்பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பெற்றோர்கள், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து, அங்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குழந்தைகளை தீவிரமாக தேடி வந்தனர். குழந்தைகளை யாராவது கடத்திச் சென்று விட்டார்களா..? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இதனிடையே, கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே இரவு 11.30 அளவில் நின்றுகொண்டிருந்த 4 குழந்தைகளையும் உக்கடம் போலீசார் மீட்டு பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு சென்ற பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குழந்தைகள் 4 பேரும் நடிகர் விஜயை பார்ப்பதற்காக வீட்டுக்கு தெரியாமல் பணம் எடுத்துக்கொண்டு சென்னை புறப்பட்டது தெரியவந்தது. நள்ளிரவில் நடிகரை பார்க்க பொள்ளாச்சியில் இருந்து நான்கு சிறுவர்கள் சென்னை செல்ல முயன்ற சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.