கோவையில் கணவன் மனைவி இடையே தகராறு, கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை..! ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை, சத்தி மெயின் ரோடு ,பெத்திக்குட்டை அருகே உள்ள பால்காரன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 45), விவசாயி. இவரது மனைவி சுருதி (36), இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை, சத்தி மெயின் ரோடு, பெத்திக்குட்டை அருகே உள்ள பால்காரன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 45), விவசாயி. இவரது மனைவி சுருதி (36), இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவும், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பிறகு,இருவரும் தூங்கச் சென்றனர்.

இன்று, அதிகாலை மோகன்ராஜ் எழுந்து பார்த்தபோது சுருதியை காணவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த மோகன்ராஜ் அக்கம்பக்கம் தேடியும் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனிடையில், வீட்டுக்கு அருகில் பாலசுப்பிரமணியம் என்பவரது தோட்டத்தில் உள்ள 20 அடி ஆழ தண்ணீர் உள்ள கிணற்றில் சுருதி விழுந்து விட்டதாக தெரிய வந்தது.

இதுகுறித்து சிறுமுகை போலீசார் மற்றும் மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து, காரமடை போலீசார் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

சுமார் ஒரு மணி நேரம் போராடி, கிணற்றிலிருந்து சுருதியின் உடலை மீட்டனர். பின்னர், போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...