கோவையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது..!

கோவை: நெல்லையை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 29), இவர் துடியலூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.


கோவை: நெல்லையை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 29), இவர் துடியலூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று, இவரும் மற்றொரு காவலர் சிவன் கார்த்திக் என்பவரும் அந்த பகுதியில் இரவு ரோந்து சென்றனர். அப்போது, சிவன் கார்த்திகை அந்த பகுதியில் இறக்கி விட்டு விட்டு, மகாராஜன் ஆரம்ப பொது சுகாதார நிலைய பகுதிக்குச் ரோந்து பணிக்காக சென்றார்.

அப்போது, அங்கு இருந்த மூன்று வாலிபர்கள் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதைப்பார்த்த, மகாராஜன் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கண்டித்துள்ளார். ஆனால், அந்த வாலிபர்கள் அங்கு இருந்து செல்லாமல் காவலர் மகாராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் அங்கு இருந்த கல்லை எடுத்து மகராஜனை தாக்கினர். இதில், அவர் பலத்த காயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிவன் கார்த்திக், அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

இதுகுறித்து மகாராஜன் துடியலூர் போலீசில் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப் பகுதியில் இருந்த 3 வாலிபர்களையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (35), துடியலூரைச்சேர்ந்த மணிரத்தினம் (25) மற்றும் அஸ்வின் (20), என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது 307 கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...