தமிழகத்தை பொறுத்த வரை யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்..! எங்களுக்கு எந்த கவலையும் இல்லை - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: தமிழகத்தை பொறுத்த வரை யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் அதைப் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.



திருப்பூர்: தமிழகத்தைப் பொறுத்த வரை யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் அதைப் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை எனவும் மக்களுக்கு உழைப்பதே எங்களது பணி, அந்த பணிக்கு ஏற்ற ஊதியத்தை மக்கள் நிச்சயம் வழங்குவார்கள் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.



அதிமுக கட்சியில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பல்லடம், மங்கலம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக பதவியேற்றுக்கொண்டார்.

பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எம் எஸ் எம் ஆனந்தன் முன்னாள் பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் வி.ஸ்.காளிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராதாகிருஷ்ணன், பல்லடம் அதிமுகவின் கோட்டையாக உள்ளது எனவும் இங்கு 4 லட்சம் வாக்குகள் உள்ளதாக தெரிவித்தார். மேலும், சட்டமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டியில் 25 முதல் 45 பேரை நியமிக்க வேண்டுமெனவும் நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.

வருகின்ற ஐந்தாம் தேதி அம்மா நினைவு நாளில் தொகுதி முழுவதும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உருவப் படத்தை வைத்து வழிபட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் புதிய வாக்காளர்களை கட்சி நிர்வாகிகள் சேர்க்க வேண்டும் எனவும், நமது வாக்குகளை சிதறவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.



மேலும், அதுமட்டுமின்றி கட்சி தொண்டர்கள் தங்களது சொந்தப் பிரச்சனைகளையும் தன்னிடம் தெரிவிக்கலாம் எனவும் அதற்கு உரிய தீர்வு காணப்படும் எனவும் வருகின்ற நாட்களில் பல்லடம் உடுமலை தொகுதிகளில் அனைத்து கட்சி நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...