கோவை: பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூர் அழுக்குசாமி கோயிலில், புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார்.
கோவை: பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூர் அழுக்குசாமி கோயிலில், புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன் புதூரில் உள்ளது அழுக்குசாமி கோயில். இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவை, வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர், கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.
அதற்குப் பிறகு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டு, சிறப்பு அன்னதானத்தில் பங்கேற்றனர். இதில், புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி குருபூஜை விழாவிற்காக, நேற்று மதியம் பொள்ளாச்சி வந்தார். அதற்குப் பிறகு இரவு 7.30 மணி அளவில் அழுக்கு சாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்வில் கோயில் அறங்காவலர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.