கோவை விமான நிலையம் அருகே வழிப்பறி கொள்ளையில் வாலிபர் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் இருவர் சரண்..!

கோவை: கோவை விமான நிலையம் அருகே எஸ். ஐ. எச் எஸ் காலனி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர் இருவரை வழிமறித்து, அதில் ஒருவரை கத்தியால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை: கோவை விமான நிலையம் அருகே எஸ். ஐ. எச் எஸ் காலனி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர் இருவரை வழிமறித்து, அதில் ஒருவரை கத்தியால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த, கொள்ளை மட்டும் கொலை வழக்கை ஆறு தனிப்படை அமைத்து விசாரித்து வந்த போலீசார், அங்கிருந்து கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில், இருவர் இன்று கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

நண்பர்களான, வால்பாறையை சேர்ந்த சுஜித் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ், கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இரு தினங்களுக்கு முன்பு, இருவரும் மோட்டார் பைக்கில் அவர்கள் நண்பரை பார்க்க சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவை விமான நிலையம் அருகே அவர்களது வாகனத்தை வழிமறித்து ஒரு கொள்ளை கும்பல், கைபேசி மற்றும் பணத்தை தரும்படி மிரட்டியுள்ளனர்.

அதில், பயந்து போய், சுஜித் தனது செல்போனை கொடுத்து விட்டார்.

ஆனால், அவருடன் சென்ற தேனியைச் சேர்ந்த விக்னேஷ் (24), செல்போனை கொடுக்க மறுத்து கொள்ளையர்களுடன் போராடியுள்ளார். இதில், ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் விக்னேஷை கத்தியால் குத்தினர். இதில், விக்னேஷ் பலத்த காயம் அடைந்து மருத்துவமனைக்கு போகும் வழியில் பலியானார். சிறு காயங்களுடன், சுஜித் தப்பினார்.

இருவர் சரண்..!

நள்ளிரவில் நடந்த வாலிபர் கொலை தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வாலிபரை கொலை கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் 6 பேரை தேடிவந்தனர். இந்நிலையில், இன்று காலை விக்னேஷ் கொலை தொடர்புடையதாகக் கூறி இரண்டு வாலிபர்கள் கோவை இரண்டாவது மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் சரணடைந்தனர்.

விசாரணையில், அவர்கள் கோவை தெற்கு வீதி, தட்சன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த அபி விஷ்ணு (22), மாசக்காளிபாளையம், பெரியார் நகரைச் சேர்ந்த சிங்காரவேலன் (21), என்பதும் தெரியவந்தது.

அவர்களிடம், விசாரித்தால் தான் விக்னேஷ் கொலையில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது தெரியவரும். இதனால், சரணடைந்த இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக, கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...