விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் காவல் துறையினர் இடையே தள்ளுமுள்ளு!

கோவை: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் காவல் துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் காவல் துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேளாண்மை திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, கோவை உக்கடம் பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்ய முயன்றனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும், மத்திய அரசு டெல்லியில் விவசாயிகளையும் மாநில அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுபவர்களை காவல் துறையினரை கொண்டு ஒடுக்குவதாக அவ்வமைப்பினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...