கோவை: கோவையில் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் முககவசம் அணியாமல் பணியாளா்கள் பணிபுரியும் பட்சத்தில் அவ்விடத்திற்கு அபராதம் விதிப்பதுடன் தற்காலிகமாக சில வாரங்களுக்கு உணவகங்கள் மற்றும் கடைகளை மூட உத்தரவிடப்படும் என மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் எச்சரித்துள்ளார்.

கோவை மாநகராட்சியின் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளினாலும், மாநகர மக்களின் ஒத்துழைப்பினாலும் தற்போது கொரோனாவின் பாதிப்பு குறைந்த நிலையில் உள்ளது. மேலும், கொரோனா தொற்று நடவடிக்கைகளில் பொதுமக்கள் முககவசம் அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே, மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் பொதுமக்கள் தேநீர் மற்றும் உணவருந்தக் கூடும் இடங்களான உணவகங்கள், சிற்றுண்டிகள், தேநீர் கடைகள் மற்றும் பேக்கரிகளில் கொரோனா தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால் உணவகங்கள், சிற்றுண்டிகள், அங்குள்ள அனைத்து அலுவலா்களும் கட்டாயம் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பணிபுரிதல் வேண்டும் என்றார்.
மேலும், அடிக்கடி சோப்பினால் கைகளைக் கழுவ வேண்டும். அவ்வாறு முககவசம் அணியாமல் அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் பணிபுரியும் பட்சத்தில் அவ்விடத்திற்கு அபராதம் விதிப்பதுடன் தற்காலிகமாக சில வாரங்களுக்கு உணவகங்கள் மற்றும் கடைகள் மூட கடுமையாக உத்தரவிடப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.