வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி மார்க்., கம்யூனிஸ்ட் கட்சியினர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் போலீஸ் தடையை மீறி நுழைந்து போராட்டம்!

கோவை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்குள் போலீஸ் தடையை மீறி நுழைந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்குள் போலீஸ் தடையை மீறி நுழைந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிடக் கூடும் என்பதால் 200 மீட்டர் முன்பாகவே காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், வேளாண் சட்டத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென அருகில் இருந்த பி.எஸ்.என்.எல் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்ற போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இதனை தொடர்ந்து, காவல்துறையினரின் தடையை மீறி பிஎஸ்என்எல் அலுவலகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் தரையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். அப்போது, டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்துப் பேச வேண்டும், வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.



இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெளியில் அழைத்து வந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் மற்றும் பி.எஸ்.என்.எல் அலுவலகம் பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...