கோவை: காங்கிரஸ் இல்லாத இந்தியா, கழகங்கள் இல்லாத தமிழகம் முழக்கம் ஜனநாயகத்தின் குரல் வளையத்தை நெறிப்பது போன்றது என்று திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்தார்.

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய குழு உறுப்பினரும் திருப்பூர் மக்களவை உறுப்பினருமான சுப்பராயன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, டெல்லியின் 5 இணைப்பு சாலைகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர் எனவும் பா.ஜ.க அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையால் இந்த போராட்டம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்ற மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை என்பதால், சட்டவிரோதமாக இந்த வேளாண்மை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்த அவர், மூன்று சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெறும் வரை இந்த முற்றுகை போராட்டம் நீடிக்கும் எனவும் விவசாயிகளின் போராட்டக் குழுவுடன் நிபந்தனை இன்றி அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பா.ஜ.கவின் காங்கிரஸ் இல்லாத இந்தியா, கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற முழக்கம் ஜனநாயகத்தின் குரல் வளையத்தை நெறிப்பது போன்றது எனவும் "மாண்புமிகு" என்று போடும் அளவிற்கு பின்னணி அமித்ஷாவிற்கு இல்லை என்றார். பா.ஜ.க, அதிமுக கூட்டணி அறிவிக்கப்பட்ட இடம் அரசு செலவில் நடைபெற்ற விழா என கூறிய அவர், அரசு மேடையில் எதிர்கட்சி தலைவரை கீழ்த்தரமாக விமர்சிப்பதும், கூட்டணி அறிவிப்பதும் மோசமானது என தெரிவித்தார்.
அதேபோல, அரசு மேடையில் கூட்டணி அறிவித்ததன் மூலம் தமிழக முதல்வராகவும், துணை முதல்வராக இருக்கும் தார்மீக அருகதையை ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இழந்து விட்டனர் எனவும் தெரிவித்தார். அமித்ஷாவின் மகன் வருமானம் குறித்து விமர்சனங்கள் வந்துள்ளது எனவும் அமித்ஷா மீதும் அவர்கள் சார்ந்து இருப்பவர்கள் குறித்தும் ஊழல் புகார்கள் இருக்கும் நிலையில், திமுகவின் ஊழல் குறித்து பேச அவர்களுக்கு தகுதியில்லை என கூறியவர், ஓரே நாடு, ஓரே தேர்தல் விவாதிக்கப்படத் தேவையில்லை என பிரதமர் சொல்வது ஜனநாயக தன்மையில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகின்றது எனவும் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தல் தீர்ப்பை போலவே அதிமுக பா.ஜ.க கூட்டணி சட்டமன்ற தேர்தலில் மண்ணை கவ்வும் எனவும் திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த அனைத்து விதமான சித்து விளையாட்டுகளிலும் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது எனவும் தெரிவித்தார். வேல்யாத்திரைக்கு அரசியல் உள்நோக்கம் இருக்கின்றது எனவும் திமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே பா.ஜ.கவின் திட்டம் எனவும் தெரிவித்தார்.