திருப்பூரில் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட கணவரை உறவினர்களிடம் இருந்து மீட்டுத் தர கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

திருப்பூர்: திருப்பூரில் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட கணவரை உறவினர்கள் அடைத்து வைத்திருப்பதாகவும் அவரை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி தனது மகளுடன் பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.


திருப்பூர்: திருப்பூரில் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட கணவரை உறவினர்கள் அடைத்து வைத்திருப்பதாகவும் அவரை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி தனது மகளுடன் பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.



திருப்பூர் கோவில்வழி பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவருக்கும் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும் கடந்த 2006ம் ஆண்டு திருப்பூரில் திருமணம் நடந்துள்ளது.

அப்போது, தனக்கு உறவினர்கள் யாரும் இல்லை அநாதையென கூறி திருமணம் செய்துள்ளார். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 2007ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில், திருப்பூரில் வேலை இல்லாத சூழலில் திண்டுக்கல்லுக்கு வேலைக்குச் சென்ற ராஜாவை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளனர்.

மேலும், தற்போது அவரை திருப்பி அனுப்பாமல் அடைத்து வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் தனக்கு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து தன்னை மீட்குமாறு அவர் கேட்டுள்ளதாகவும், இது குறித்து ஏற்கனவே காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கணவரை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பிரியா இன்று தனது மகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...