கோவை: கோவை அருகே பட்டா கத்திகளுடன் கார் திருட்டில் ஈடுபட்ட கும்பலை கைது செய்த போலீசார், 11 காரை பறிமுதல் செய்தனர்.

கோவையில் இன்று அதிகாலை மதுக்கரை போலீசார் மதுக்கரை, அரிசிபாளையம், ஆப்பிள் கார்டன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது அப்பகுதியில் நின்றிருந்த மாருதி காரில் சந்தேகத்திற்கிடமாக சோதனை செய்தனர்.

அப்போது, அதிலிருந்த 6 பேர் தப்பி ஓடினர். அதில் 3 பேரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். மேலும் அந்த காரில் பட்டாக்கத்தி, கயிறு போன்ற கொள்ளை அடிக்கக்கூடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அவர்களிடம் விசாரணை செய்தபோது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரம் பகுதியில் வசிக்கக்கூடிய சுரேந்திரன் (23) என்பதும், மதுக்கரை ஈச்சனாரி பகுதியில் வசிக்கக் கூடிய சக்தி (23), என்பதும், திருநெல்வேலி நாங்குநேரி விஜயராஜ் (23) என்பதும் தெரியவந்தது.

மேலும், அவரிடம் விசாரணை செய்ததில் ஈச்சனாரி சுந்தராபுரம் சந்திப்பில் ஆட்டோ ஒர்க்ஷாப் நடத்தி வரும் சாதிக், இம்ரான் மற்றும் அதே இடத்தில் ஓட்டல் நடத்தி வரும் தினேஷ் உட்பட நாங்கள் 6 பேரும் சேர்ந்து செல்ப் டிரைவிங் கார்களை பெங்களூருக்கு வாடகைக்கு எடுத்துச் சென்று, அங்கு அந்த காரில் உள்ள ஜி.பி.எஸ் கருவியை துண்டித்துவிட்டு குறைந்த விலைக்கு கார்களை விற்பனை செய்வது வழக்கம்.
அதில் உள்ள முக்கியமான பொருட்களை கழட்டி விற்பனை செய்வது, அடமானம் வைப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறினர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த ஆடி கார் உட்பட 11 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய 3 பேரை பிடிப்பதற்காக போலீசார் 2 தனிப்படைகளை அமைத்து உள்ளனர்.
மேலும், இந்த குற்றவாளிகள் வேறு ஏதாவது குற்ற வழக்குகள் மற்றும் கொலை கொள்ளைச் சம்பவங்களில் தொடர்பு உள்ளவர்களா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.