கோவையில் மனைவி, குழந்தைகளை பேருந்து நிலையத்தில் தவிக்க விட்டு மாயமான தொழிலாளி..! போலீசார் விசாரணை

கோவை: கோவையில் மனைவி, குழந்தைகளை பேருந்து நிலையத்தில் தவிக்க விட்டு மாயமான தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் மனைவி, குழந்தைகளை பேருந்து நிலையத்தில் தவிக்க விட்டு மாயமான தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூர்யா (27), ஓட்டல் தொழிலாளியான இவரது மனைவி ஜெனிதா மேரி (23). இவர்களுக்கு 4 வயது மகள், 2 வயது மகன் உள்ளனர். சூர்யா கடந்த சில மாதங்களாக கோவை கருமத்தம்பட்டியில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் திருநெல்வேலி செல்வதற்காக மனைவி குழந்தைகளுடன் சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் வந்தார். குடும்பத்தினரை பஸ்ஸில் உட்கார வைத்த பின்னர் கடைக்குச் சென்று வருவதாக கூறிய சூர்யா, வெளியே சென்றார். ஆனால், வெகுநேரமாகியும் அவர் வரவில்லை.



இதையடுத்து, அவரது குடும்பத்தினர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் தேடினர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. மேலும், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. கணவர் தவிக்க விட்டு சென்றதால் ஜெனிதா மேரி குழந்தைகளுடன் கதறி அழுதார்.

இதனை தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிங்காநல்லூர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சூர்யாவின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...