கோவை: கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் மதுக்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் 5 தடுப்பணைகள் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்,
ஐஏஎஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், சட்டத்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முதலமைச்சர் அரசு பள்ளி மாணவர்களுக்காக மருத்துவ படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டைக் கொண்டு வந்துள்ளார். கிராமத்தில் பிறந்த விவசாயி கூட நாட்டை ஆள முடியும், என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

அதேபோல, நிவர் புயலின் போது செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்த நிலையில், மக்களை காப்பதற்காக நேரடியாக செம்பரம்பாக்கம் அணைக்குகே சென்று முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கோவை மாவட்டத்தில் அரசு உள் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர 21 பேர் செய்ய தேர்வு செய்யப்பட்ட நிலையில், 15 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. மீதமுள்ள 6 பேர் காத்திருப்பில் உள்ளதாக கூறினார்.

கோவையில் உள் ஒதுக்கீட்டில் தேர்வான 15 மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தை அரசே முழுவதுமாக ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.