கோவையில் ஸ்ட்ரீட் வெண்டர் திட்டத்தில் அனுமதியில்லாத 69 ஆயிரத்து 236 வியாபாரிகளின் கடைகளுக்கு தடை..!

கோவை: கோவையில் ஸ்ட்ரீட் வெண்டர் திட்டத்தில் அடையாள அட்டை இல்லாத அனுமதியில்லாத 69 ஆயிரத்து 236 வியாபாரிகளின் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் ஸ்ட்ரீட் வெண்டர் திட்டத்தில் அடையாள அட்டை இல்லாத அனுமதியில்லாத 69 ஆயிரத்து 236 வியாபாரிகளின் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பகுதிகளில் நடைபாதை வியாபாரிகளுக்கான (ஸ்டீரிட் வெண்டர்) தனிக் கொள்கை உருவாக்கப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 431 நடைபாதை வியாபாரிகள் பொது இடத்தில் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்வது தெரிய வந்தது. அதில், இதுவரை 80 ஆயிரத்து 667 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு கடை நடத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு கடை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், அடையாள அட்டை இல்லாத அனுமதியில்லாத 69 ஆயிரத்து 236 வியாபாரிகளுக்கு உள்ளாட்சி நிர்வாகம் போலீஸ் நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித் துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேலும், தடையை மீறி கடை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில வியாபாரிகள் எங்களுடைய பெயர்களை திட்டமிட்டு ஸ்ட்ரீட் வெண்டர் திட்டத்தில் சேர்த்து அனுமதி வழங்கவில்லை. கடை நடத்த முறையான அனுமதி வேண்டும் என நடைபாதை வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...