கோவை: கோவையில் கட்டில் மீது பீரோ விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (65), இவர் மனைவி மீனலோசினி (62), இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் கொடைக்கானலிலும், மகன் பெங்களூரிலும் வசிக்கின்றனர்.
இதனிடையே, கவனிக்க ஆள் இல்லாத நிலையில் மீனலோசினி தொண்டாமுத்தூர் வண்டிகாரணூரில் உள்ள ஒரு காப்பகத்தில் வசித்து வந்தார். சுரேஷ் சென்னையில் வசித்து வந்தார்.
இந்நிலையில், சுரேஷ் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு இனி அங்கே இருக்க வேண்டாம். சென்னைக்கு வா என அழைத்தார். இதைத்தொடர்ந்து, மீனலோசினி காப்பகத்தில் இருந்த தனது பொருட்களை நேற்று முன்தினம் எடுத்து பேக் செய்து வைத்துவிட்டு இரவு தூங்கச் சென்றார்.
இந்த நிலையில், காலையில் காப்பக ஊழியர்கள் எழுப்பச் சென்ற போது, அவரது கட்டில் மீது பீரோ விழுந்து கிடந்தது. இதில் உடல் நசுங்கி மீனலோசினி இறந்து கிடந்தார்.
இதனை தொடர்ந்து, தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.