கோவை: நூற்றாண்டை எட்டியுள்ள பொள்ளாச்சி நகராட்சியில், பொள்ளாச்சி பகுதியின் அடையாளங்களை சுவர்களில் தத்ரூபமான ஓவியங்களாக வரைந்து வருவது அனைவரையும் கவர்ந்துள்ளது.

பொள்ளாச்சி நகரம், ஆங்கிலேயர் ஆட்சியில் 1920ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இரண்டாம் நிலை நகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அதே ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி நகராட்சியாக செயல்பட தொடங்கியது. தற்போது 36 வார்டுகளை கொண்ட பொள்ளாச்சி நகராட்சி இந்தாண்டு நூற்றாண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இந்நிலையில், இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுவர்களில் பொள்ளாச்சி சுற்றுப்பகுதியின் அடையாளங்களை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில், தத்ரூபமான ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.

இதில் தென்னை மரங்களுக்கு நடுவே ஓடும் அம்பாரபாளையம் ஆறு, மலைச்சாலையில் துள்ளி விளையாடும் வரையாடுகள், குரங்கு அருவி, வால்பாறை தேயிலைத் தோட்ட குன்றுகள், யானை, வனத்திற்குள் கம்பீரமாக அமர்ந்து பார்க்கும் புலி, ரயில் நிலையம், பாரம்பரிய விளையாட்டான ரேக்ளா போட்டி, ஆகியவை தத்ரூபமாக ஓவியங்களாக வரையப்பட்டு உள்ளன. வரையப்பட்டுள்ள ஓவியங்களை பொள்ளாச்சி பகுதி மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற ஓவியங்களால் பொள்ளாச்சி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சி அடையாளங்களை காண வேண்டும் எனவும், வருங்கால சந்ததிகளும் இந்த அடையாளங்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த ஓவியங்கள் வரையப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.