பாதிப்புகள் குறைய புயல் வலுவிழந்ததே காரணம். சுற்றுபுற சூழலையோ, நீர்நிலைகளையோ பாதுகாக்கும் மனநிலையில் இந்த அரசு இல்லை - கோவையில் எம்.பி கனிமொழி

பாதிப்புகள் குறைய புயல் வலுவிழந்ததே காரணம். சுற்றுபுற சூழலையோ, நீர்நிலைகளையோ பாதுகாக்கும் மனநிலையில் இந்த அரசு இல்லை - கோவையில் எம்.பி கனிமொழி


கோவை: 2ஜி வழக்கில் ஏற்கனவே தீர்ப்பு வழங்கபட்டு விட்டது, என கோவை விமான நிலையத்தில் திமுக எம்.பி கனிமொழி பேட்டி அளித்துள்ளார்.

சேலத்தில் நாளை பிரச்சார பயணத்தை துவங்க திமுக மகளிரணி செயலாளரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் இன்று வந்தார்.நஅவருக்கு விமான நிலையத்தில், திமுக மகளிர் அணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



அதன், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம் பி கனிமொழி,

சென்ற முறை சென்னையில் மழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அதன் பின்பும் இந்த அரசு எந்த பாடமும் கற்றுகொள்ளவ்வில்லை. தண்ணீர் வரும் வழிதடங்கள் தூர்வார படவில்லை.இந்த முறை சென்னையில் ஓரளவிற்கு பாதிப்புகள் குறைய புயல் வலுவிழந்ததே காரணம். மீண்டும் வெள்ளமோ, புயலோ ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படும் சூழல் தான் நிலவி வருகிறது. இன்றைய ஆட்சி, சுற்றுபுற சூழலையோ நீர்நிலைகளையோ பாதுகாக்கும்மனநிலையில் இல்லை, என்று குற்றம் சாட்டினார்.

கார்த்திகை திருநாளை முன்னிட்டு பிரச்சாரம் துவங்கப்படுகின்றதா என்ற கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி, திமுக பிரச்சாரத்தை ஆரம்பித்து நிறைய நாட்களாகி விட்டது எனவும் பிரச்சாரத்திற்கு இந்த நாள், அந்த நாள் என்றவேறுபாடு கிடையாது, என தெரிவித்தார்.



மேலும், 2ஜி வழக்கு விசாரணை வேகமாக நடைபெற்று வரும் நிலையில் அது பாதிப்பை ஏற்படுத்துமா..? என்ற கேள்விற்கு

2ஜி வழக்கில் தீர்ப்பு ஏற்கனவே வந்துவிட்டது என்றவர், இதில் குற்றம் சாட்டபட்டவர்கள் குற்றவாளிகள் இல்லை என நீதிபதி தெரிவித்துவிட்டார் என தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில், திமுகவை குறிவைக்கும் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர், சமூக வலைதளங்களில் பா.ஜ.க மற்றும் அதிமுகவினர்பொய் பிரச்சாரங்கள் மற்றும் தவறான செய்திகளை முன்னெடுத்து வருகின்றனர் என குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து, அவர் சாலை மார்க்கமாக சேலம் கிளம்பி சென்றார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...