உதகையில் 8 மாதங்களுக்குப் பிறகு சினிமா படபிடிப்பிற்காக மலை ரயில் இயக்கம்!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொராேனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட மலைரயில் இந்தி படத்தின் படப்பிடிப்பிற்காக குன்னூரில் இருந்து உதகை வழித்தடத்தில் இன்று இயக்கப்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொராேனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட மலைரயில் இந்தி படத்தின் படப்பிடிப்பிற்காக குன்னூரில் இருந்து உதகை வழித்தடத்தில் இன்று இயக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கொராேனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக மலைரயில் சேவையை தெற்கு ரயில்வே ரத்து செய்தது.

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த இந்தி படக் குழுவினர் தாங்கள் தயாரிக்கும் இந்தி வெப்டீவி தொடரில் மலைரயில் காட்சிகள் இடம் பெற தெற்கு ரயில்வேயிடம் அனுமதி பெற்றிருந்ததைத் தொடர்ந்து, குன்னூர் உதகை இடையே கேத்தி ரயில் நிலையம் பகுதியில் மலைரயிலின் காட்சிகள் படமாக்கப்பட்டன.

அப்டாப் லவ் என்ற வெப் படத்திற்காக நீலகிரி மலைரயில் கேத்தி ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது, சேலம் கோட்டத்தில் அனுமதி பெற்று 5 லட்சம் ரூபாய் வைப்பு தொகையாக கட்டியுள்ளனர். இதில் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எஞ்சினுடன் 5 பெட்டிகள் பொருத்தப்பட்டு மலை ரயில் கேத்தி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்ததைப் படக்குழுவினர் கேமராவில் பதிவு செய்தனர். கடந்த 8 மாதங்களாக இயங்காத மலைரயில் இயக்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மலை ரயிலை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

மேலும், கேத்தி ரயில் நிலையம் அறிவிப்பு பலகையில் படப்பிடிப்புக்காக என்று மாற்றப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...