பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் அறுவடை செய்யப்படும் மரவள்ளிக்கிழங்குகளை, மும்பை போன்ற பெரு நகரங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம், நல்லி கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யபட்டு வந்தது. தற்போது, மரவள்ளிக் கிழங்கு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி மரவள்ளிக் கிழங்கிற்கு, மும்பை மற்றும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருப்பதால், அறுவடை செய்யப்படும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் பெரும் அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, 10 மாத பயிரான மரவள்ளிக்கிழங்கு லாபகரமான விவசாயம் தரும். பெரும் மாநிலங்களான, மகாராஷ்டிர மற்றும் கேரளாவில் பெரும்பாலும் மரவள்ளிக்கிழங்கை உணவாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, சேலம் மாவட்டத்திற்கு மரவள்ளி கிழங்கை பயன்படுத்தி ஜவ்வரிசி தயாரிக்க அதிகளவில், வியாபாரிகள் வாங்கி செல்வதாக தெரிவித்தனர்.
மேலும் கூறுகையில், 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து சாகுபடி செய்துள்ளோம். கடந்தாண்டு ஒரு டன் 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இந்த ஆண்டு ஒரு டன் 8 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாவதால், சரியான லாபம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.
ஆனால் விவசாயிகளிடம் குறைந்த விலையில் வாங்கிச் செல்லும் வியாபாரிகள், மரவள்ளிக்கிழங்கை நுகர்வோர்களுக்கு அதிக விலைக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்து வருவதால், இடைத்தரகர்களுக்கு தான் லாபம் அதிகம் கிடைப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, அரசு நேரடியாக மரவள்ளி கிழங்குகளை கொள்முதல் செய்தால், விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் சத்தான மரவள்ளிக்கிழங்கு கிடைக்கும் என்று விவசாயிகள், தெரிவித்துள்ளனர்.