காபி பிரியர்களுக்கு நற்செய்தி..! ஆசியாவில் முதன் முதலில் காபி பயிரிட்ட 'மதர் மிர்ரா' நிறுவனத்தின் 'மிர்ராஸ்' காபி மற்றும் டீத்தூள் கோவையில் நேரடி விற்பனை..!

கோவை: ஆசியாவில் முதன் முதலில் காபி பயிரிட்ட 'மதர் மிர்ரா' என்ற இந்திய நிறுவனம் தற்போது தனது புதிய தயாரிப்புகளான 'மிர்ராஸ்' என்ற பெயரில் காபி மற்றும் டீத்தூள் நுகர்வோருக்கு நேரடியாக கொண்டு செல்ல உள்ளது.


கோவை: ஆசியாவில் முதன் முதலில் காபி பயிரிட்ட 'மதர் மிர்ரா' என்ற இந்திய நிறுவனம் தற்போது தனது புதிய தயாரிப்புகளான 'மிர்ராஸ்' என்ற பெயரில் காபி மற்றும் டீத்தூள் நுகர்வோருக்கு நேரடியாக கொண்டு செல்ல உள்ளது. 



ஆசியாவிலேயே முதன் முறையாக மதர் மிர்ரா என்ற இந்திய நிறுவனம் காபி பயிரை பயிரிடத் தொடங்கியது.

பி.பி.ஆர்.சுப்பிரமணியம் என்பவரால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் தலைமுறை தலைமுறையாக, காபி விவசாயத்தை மேற்கொண்டு வருகிறது. மதர் மிர்ரா தோட்டத்தில் விளைந்த காபி பயிர்கள், பல்வேறு பெரு நிறுவனங்களும், நட்சத்திர விடுதிகளிலும் கிடைக்கப்பெற்று வந்தன. அதோடு, பல முன்னணி நிறுவனங்கள் இவர்கள் காபியை வாங்கி அவர்களது பெயரில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த சூழலில், இந்த நிறுவனம் தற்போது நேரடியாக விற்பனையைத் துவங்கியுள்ளது. 



'மிர்ராஸ்' என்ற பெயரில் காபி மற்றும் டீத்தூள் விற்பனையைத் துவங்கி இருக்கும் இந்த நிறுவனம், மிக விரைவில் நாடு முழுவதும் தங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்த உள்ளதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் நம்மிடம் கூறியதாவது: 

கூர்க் பகுதியில் அமைந்துள்ள எங்களது தோட்டத்தில் விளைவிக்கப்படும் காபி பயிர்களை நாங்களே நேரடியாக விற்பனை செய்யத் துவங்கியுள்ளோம். கொரோனா ஊரடங்கிற்கு முன்பு வரை, மாதம் 50 டன் வரை காபி பயிர்கள் அறுவடையானது. ஆனால், தற்போது ஊரடங்கால் உலக நாடுகளில் தேவை குறைந்ததால் தற்போது 30 டன் வரை மட்டுமே அறுவடையாகிறது. 

விரைவில் , இந்த நிலை மாறும். ஏற்கனவே இணையம் வழியாக எங்களது காபி மற்றும் டீத்தூள், சமையல் எண்ணை வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஊரடங்கு காலத்தில் எங்களது வியாபாரம் இணையம் மூலமாக பன்மடங்காகப் பெருகியுள்ளது. 

முதற்கட்டமாக, தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களிலும் சில்லறை விற்பனையை முறையாக துவங்க உள்ளோம். அடுத்த கட்டமாக இந்தியா மற்றும் பன்னாடுகளுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்த உள்ளோம். அதன்படி, 

கோவையில் உள்ள 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 'மிர்ராஸ்' காபி கிடைக்கும். 

காபி, ஒற்றை தோட்டப் பயிர் என்பதால் இதன் சுவை தனித்துவம் பெற்று இருக்கும். விலையும் கூடுதலாக இருக்காது, இவ்வாறு சுந்தர் சுப்ரமணியம் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...