சாலையோரங்களில்‌ குப்பைகளை கொட்ட வேண்டாம்‌..! அனைத்து‌ பகுதிகளையும் தூய்மையாக வைக்க கோவை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்!

கோவை: கோவையில் சாலையோரங்களில்‌ குப்பைகளை கொட்ட வேண்டாம்‌ எனவும் அனைத்துப்‌ பகுதிகளையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை: கோவையில் சாலையோரங்களில்‌ குப்பைகளை கொட்ட வேண்டாம்‌ எனவும் அனைத்துப்‌ பகுதிகளையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில்‌ இன்று ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அதிகாரி அவர்கள்‌ வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.29 சரவணம்பட்டி, சிவானந்தபுரம்‌ மடாலயம்‌ ரோடு ஜனதா நகரில்‌ தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில்‌ தூய்மைப்பணியாளர்கள்‌ கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வரும்‌ பணிகளை பார்வையிட்டார்.



பின்னா்‌, அப்பகுதியிலுள்ள மளிகைக்கடைகள்‌, பூக்கடைகளில்‌ விற்பனை செய்வோரிடம்‌ குப்பைகளை சாலையோரங்களில்‌ கொட்டக்‌ கூடாது. குப்பைத்‌ தொட்டிகளில் மட்டுமே குப்பைகள் போடப்பட வேண்டும்‌. கழிவுநீர் கால்வாய்களில்‌ குப்பைகளைக்‌ கொட்டக்‌ கூடாது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்‌. கடைகளுக்கு பொருட்கள்‌ வாங்க வருவோரிடம்‌ முகக்கவசம்‌ கட்டாயம்‌ அணிந்து வரவேண்டுமென அறிவுறுத்த வேண்டும்‌ என தெரிவித்தார்



பின்னர்‌, அப்பகுதியில்‌ உள்ள கோழி இறைச்சி விற்பனை செய்வோரிடம்‌ கோழிக்கழிவுகளை சாலையோரங்களில்‌ கொட்டக்‌ கூடாது. அதை டின்களில்‌ சேகரித்து தூப்மைப்பணியாளர்களிடம்‌ வழங்கிட வேண்டும்‌ என தெரிவித்தார்.



தொடர்ந்து, வடக்கு மண்டலம்‌ கணபதி, வ.ஊ.சி நகர்‌, போலீஸ்‌ காலனி சாலையில்‌ செயல்பட்டு வந்த தனியார்‌ டிபார்ட்மென்ட்‌ ஸ்டோர்‌ குப்பைகளை சாலையோரங்களில்‌ கொட்டியதற்காக அபராதம்‌ விதித்த பின்னர்‌, வார்டு எண்‌.41க்குட்பட்ட போலீஸ்‌ காலனியில் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று வெப்பமானி மூலம்‌ சளி, காய்ச்சல்‌, இருமல்‌ உள்ளவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்யும்‌ பணிகளை பார்வையிட்டார்.



மேலும், கொரோனா தொற்று நோயால்‌ பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளை தனிமைப்படுத்தப்பட்ட வீடு என அறிவிப்புப்பலகை வைக்கப்பட வேண்டும்‌,

தனிமைப்படுத்தப்பட்டவர்கள்‌ தனிமைப்படுத்தப்பட்ட காலம்‌ முடியும்‌ வரை வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என தெரிவித்த அவர், அப்பகுதியில்‌ வசிக்கும்‌ மக்களிடம்‌ அனைவரும்‌ முகக்கவசம்‌ கட்டாயம்‌ அணிய வேண்டும்‌, சமூக இடைவெளியை பின்பற்றிட வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அதிகாரி பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மண்டல உதவி ஆணையர்‌ செந்தல்குமார்‌ ரத்தினம்‌(வடக்கு), மண்டல சுகாதார அலுவலர்‌ ராமச்சந்திரன்‌, சுகாதார ஆய்வாளர்கள்‌ மற்றும்‌6மாநகராட்சி அலுவலா்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...