கோவை: கோவையில் நாளை முதல் டிசம்பர் 4-ம் தேதி வர ஆண்களுக்கு நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் பொறுப்பு துணை இயக்குனர் கௌரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை குடும்பநல இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் வரும் 28-ம் தேதி (நாளை) முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஆண்களுக்கான தழும்பு இல்லாத நவீன குடும்பம் நல அறுவை சிகிச்சை முகாம் நடக்கிறது. பயிற்சி பெற்ற சிறந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் 5 நிமிடத்தில் இலவசமாக செய்யப்பட உள்ளது.
இதில், கத்தியின்றி ரத்தமின்றி எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி செய்யப்படும். இந்த சிகிச்சையை ஏற்றுக் கொள்ளும் ஆண்களுக்கு அரசு ஊக்கத் தொகையாக 1,100 வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சை செய்வதால் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கோ, கடின உழைப்பிற்கோ தடையிருக்காது.
மேலும், பெண்களுக்கு செய்யப்படும் குடும்பநல அறுவை சிகிச்சையினை விட பன்மடங்கு எளிமையானது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை. பக்க விளைவுகள் எதுவும் இல்லாதது. தகுதி வாய்ந்த ஆண்கள் பயன்படுத்திக்கொள்ளவும், என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.