கோவையில் பூஜை செய்வதாக கூறி போலி நகை விற்ற போலி பெண் சாமியார் உட்பட 3 பேர் கைது!

கோவை: கோவையில் பூஜை செய்வதாக கூறி போலி நகை விற்ற போலி பெண் சாமியார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவையில் பூஜை செய்வதாக கூறி போலி நகை விற்ற போலி பெண் சாமியார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அரிமா என்பவரது மனைவி ரமணா (40). இவர் கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் குடியிருந்து வந்தார். இவர் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை சாமி ஆடி குறி சொல்வார். இவரிடம் குறி கேட்க அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் வந்து சென்றனர்.

இந்நிலையில், அவ்வாறு குறி கேட்க வரும் பெண்களிடம் ரமணா தன்னிடம் வெளிநாட்டு தங்க பிஸ்கட் இருப்பதாகவும் அவற்றை மார்க்கெட் விலையைவிட குறைந்த விலைக்கு தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதனால் ரமணாவின் மீது சந்தேகமடைந்த பொதுமக்கள் இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்தனர்.

இதையடுத்து, புகாரின் பேரில் போலீசார் ரமணாவின் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வீட்டில் இருந்த 6 போலி தங்க பிஸ்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வீட்டில் இருந்த ரமணா மற்றும் சுரேஷ்பாபு 23 சீனிவாஸ் 22 ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

பின்னர், ரமணாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

நான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தேன். பின்னர் பாப்பம்பட்டி பிரிவில் தங்கியிருந்து குறி சொல்லி வந்தேன். என்னிடம் குறி கேட்க ஏராளமான பெண்கள் வந்தனர். நான் பணம் சம்பாதிப்பது, பெரிய சாமியார் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். இதற்காக என்ன செய்வது என யோசித்த போதுதான் வெள்ளி கட்டிகளை உருக்கி பிஸ்கட் வடிவில் உருவாக்கி அதன் மீது தங்க முலாம் பூசி ஏமாற்றி விற்பனை செய்யலாம் என யோசனை தோன்றியது.

இதுகுறித்து சுரேஷ்பாபு சீனிவாஸ் அவரிடம் தெரிவித்தேன். அவர்கள் வெள்ளியை உருக்கி தங்க முலாம் பூசி ஆறுகளை இடம் கொடுத்தன. இது குறித்து என்னிடம் குறி கேட்க வருபவர்கள் இடம் நான் தெரிவித்தேன். அவர்கள் போலீசில் புகார் செய்தால் சிக்கிக்கொண்டேன் இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், போலீசார் யாராவது ரமணாவிடம் தங்க கட்டிகளை வாங்கி ஏமாந்தவர்கள் இருக்கிறார்களா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் சாமியார் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...