கோவையில் சாலையோரத்தில் கிடந்த ஒரு லட்சம் ரூபாயை காவல்துறை மூலம் உரிய நபரிடம் ஒப்படைத்த நபருக்கு குவியும் பாராட்டுகள்..!

கோவை: கோவையில் சாலையோரத்தில் கிடந்த ஒரு லட்ச ரூபாயை காவல் துறை மூலமாக உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது.



கோவை: கோவையில் சாலையோரத்தில் கிடந்த ஒரு லட்ச ரூபாயை காவல் துறை மூலமாக உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை போத்தனூர் ரோடு, சங்கமம் நகரில் வசிப்பவர் ஸ்டெல்லா. இவர் நேற்று மாலை பால் வாங்குவதற்காக வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். 

அப்போது, வீட்டு வாசலில் உள்ள சாலையோரத்தில் இரண்டு 500 ரூபாய் கட்டுகள் கிடந்தன. அதை எடுத்த ஸ்டெல்லா செட்டிபாளையம் காவல் நிலையத்துக்குச் சென்று சப் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷிடம் விவரத்தைச் சொல்லி ஒப்படைத்தனர். 

இந்த நிலையில், போத்தனூரைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவர் தான் பள்ளி தொழுகை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லும் வழியில் வியாபாரத்திற்காக வைத்திருந்த இரண்டு 500 ரூபாய் கட்டுகள் கீழே விழுந்து விட்டன என கூறி அங்கு வந்தார். தன்னுடன் வந்த நண்பர் சபிக் என்பவரை சாட்சியாகவும் அழைத்து வந்தார். 

இதையடுத்து, உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் முன்னிலையில் ஒரு லட்சம் ரூபாயை இஸ்மாயில் இடம் வழங்கினார். இதனை தொடர்ந்து, ஸ்டெல்லாவின் நேர்மையை பாராட்டி அனைவரும் அவரை வாழ்த்தினர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...