கோவை: கோவையில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக ரூ.150 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வராக் கடனை உடனடியாக வசூலிக்க வேண்டும். தொழிலாளர் உரிமைகளை பறித்து விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை நிறைவேற்றும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடந்தது.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் உள்ள வங்கி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 250 கிளைகளில் பணியாற்றும் 2,500 பேர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து வங்கி ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
இந்த வேலை நிறுத்தத்தில் வங்கி அதிகாரிகள் சங்கம் கலந்து கொள்ளவில்லை. ஊழியர்கள் சங்கம் மட்டுமே பங்கு கொள்ளும் கொண்டுள்ளது. வங்கிக் கிளைகள் திறந்து இருந்தபோதிலும் பணிகள் ஓரளவு பாதிக்கப்பட்டது. ஊழியர்களின் பணிகளை அதிகாரிகள் செய்ய முடியாது என்பதால் கோவை மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் சுமார் ரூபாய் 150 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது என்றனர்.
இதேபோல, கோவை மாவட்ட எல்ஐசி மற்றும் பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பிலும் நேற்று வேலை நிறுத்தம் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் 20 கிளைகளை கொண்ட எல்.ஐ.சி ஊழியர்கள் 800 பேர், 25 கிளைகளைச் சேர்ந்த பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் 500 பேர் பணிக்கு செல்லவில்லை. ஆனால், அதிகாரிகள் பணிக்கு சென்றிருந்தனர். இதனால் இன்சூரன்ஸ் அலுவலகங்கள் நேற்று திறந்து இருந்தன.
அதேசமயம், வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் கலந்து கொண்டதால் இன்சூரன்ஸ் அலுவலகங்களில் பிரிமியம் கட்டணம் செலுத்துதல், புதிய பாலிசிகள் எடுத்தல் ஆகிய பணிகள் பாதிக்கப்பட்டன. இதன் மூலம் 50 லட்சம் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி கோட்ட அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், கஜேந்திரன், துளசிதரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட வருமான வரித் துறை ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டன. இதனால் கோவை பொள்ளாச்சி ஆகிய இடங்களில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன. ஆனால் அதிகாரிகள் சங்கத்தினர் வேலைக்கு வந்து இருந்தனர்.
இருப்பினும், வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். கோவை ரேஸ் கோர்சில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் முன்பு நடந்த தர்ணா போராட்டத்தில் வருமான வரித் துறை ஊழியர்கள் சங்கங்கள் ஒருங்கிணைப்பு செயலாளர் மதுசூதனன், கோவை கிளை தலைவர் ஜி. எஸ். ராஜேஸ்வரி, சரக செயலாளர் ரமேஷ், சங்க பொருளாளர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.