கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்கு முறைகேடாக இணைப்பு வழங்கினால் கடும் நடவடிக்கை - மாநகராட்சி துணை ஆணையர் எச்சரிக்கை!

கோவை: கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்கு முறைகேடாக இணைப்பு வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி துணை ஆணையர் எஸ்.மதுராந்தகி எச்சரித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்கு முறைகேடாக இணைப்பு வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி துணை ஆணையர் எஸ்.மதுராந்தகி எச்சரித்துள்ளார்.

கோவை மாநகராட்சி பகுதியில் விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படுகிறது. உக்கடம், பெரிய குளத்தை சுற்றி உள்ள பகுதியில் வசிப்பவர்களுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இணைப்பு வழங்கி 10 தவணைகளாக பிரித்து சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கும் வகையில் இணைப்பு வழங்கப்படுகிறது. மற்ற இடங்களில் வைப்புத்தொகை மற்றும் இணைப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆனால், பாதாள சாக்கடையில் கசிவு என்று கூறி குழிதோண்டி வீடுகளுக்கு முறைகேடாக இணைப்பு வழங்கப்படுவதாகவும், இதற்காக குறிப்பிட்ட தொகையை உதவி செயற்பொறியாளர்கள் சிலர் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

இவ்வாறு முறைகேடாக பாதாள சாக்கடை இணைப்பு கொடுப்பதால் மாநகராட்சிக்கு வரக்கூடிய வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகர இன்ஜினியர் லட்சுமணன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் பேசுகையில், பாதாள சாக்கடை இணைப்பு விண்ணப்பம் பெற்ற பதிவேடு பராமரிக்க வேண்டும் என்றும் அதற்குரிய கட்டணத்தை மாநகராட்சியில் செலுத்திய பிறகே இணைப்பு வழங்க வேண்டும் என்றும் முறைகேடு செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதேபோல, குடிநீர் இணைப்பு வழங்குவதில் பிளம்பர்கள் தலையீடு அதிகரித்து இருப்பதாக புகார்கள் வருவதாகவும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்திய பின் குடிநீர் இணைப்பு உத்தரவை விண்ணப்பதாரர்கள் இடம் மட்டும் வழங்க வேண்டும் எனவும் துணை ஆணையர் மதுராந்தகி உத்தரவிட்டார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...