உதகை நீதிமன்றத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 24 வயது இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு!

நீலகிரி: உதகை நீதிமன்றத்தில் இன்று போக்சோ வழக்கில் 24 வயது இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி அருணாசலம் உத்தரவிட்டார்.


நீலகிரி: உதகை நீதிமன்றத்தில் இன்று போக்சோ வழக்கில் 24 வயது இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி அருணாசலம் உத்தரவிட்டார்.

நீலகிரி மாவட்டம் மசினகுடி வாழை தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன்(24) (தந்தை பெயர் நாதன் கூலி தொழிலாளி). இவர் தேன் குரும்பர் இனத்தைச் சேர்ந்தவர்.

இந்நிலையில், இவர் இப்பகுதி 16 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் அருகே உள்ள கோவிலில் தாலிகட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண்ணின் தாயார் சுந்தரி கடந்த 26-3-18 கொடுத்த புகாரில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இன்று நீதிபதி அருணாசலம் இந்த இளைஞருக்கு பெண்ணை கடத்திய குற்றத்திற்காக 3 ஆண்டுகள், குழந்தை திருமணத்திற்காக ஒரு வருடம், பாலியல் வன்கொடுமை குற்றம் என மொத்தம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பை தொடர்ந்து அந்த இளைஞர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக மாலினி பிரபாகரன் ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கின் தீர்ப்பு பதினெட்டு மாதத்தில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...