‘அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா’ திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு!

கோவை: ‘அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா’ திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


கோவை: ‘அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா’ திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இ.எஸ்.ஐ கார்ப்பரேஷன் காப்பீட்டு நபர்களுக்கு வேலையிழப்பின் போது பண இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்காக ‘அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா’ எனும் புதிய திட்டம் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதி முதல் 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி வரை முன்னோட்ட அடிப்படையில் இ.எஸ்.ஐ.சி நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெறும் தொழிலாளர்கள், வேலையில்லாமல் இருக்கும்போது, அவர்களுக்கு அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ் நிவாரணத் தொகை அளிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தை, 2021 ஜூன் 30-ம் தேதி வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதென இ.எஸ்.ஐ.சி நிறுவனம் தீர்மானித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தமது வேலைகளை இழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை அளிப்பதற்காக, இத்திட்டத்தின் கீழ் உள்ள தற்போதைய நிபந்தனைகளை தளர்த்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தளர்த்தப்பட்ட நிபந்தனைகளின்படி, அதிகரிக்கப்பட்டுள்ள நிவாரணத்தொகை 24.03.2020-லிருந்து 31.12.2020 வரையிலான காலத்திற்கு வழங்கப்படும். அதற்கு பிறகு, அதாவது 01.01.2021 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு தளர்த்தப்படாத முந்தைய நிபந்தனைகளுடன் இந்தத் திட்டம் தொடரப்படும்.

இதுகுறித்து கோவை இ.எஸ்.ஐ.சி சார்மண்டல அலுவலகத்தின் துணை இயக்குனர் (பொறுப்பு) ரகுராமன் கூறுகையில், ‘‘தொழிலாளர்கள் மற்றும் தொழிலதிபர்களின் நலனில் அக்கறை கொண்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மருத்துவ சேவை மற்றும் பிற சேவைகளின் தரத்தை இ.எஸ்.ஐ மேம்படுத்தி வருகிறது,’’ என்று தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...