கோவை: கோவையில் கொசுவர்த்தி சுருள் நெருப்பு சேலையில் பட்டு தீப்பிடித்ததால் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சாய்பாபா காலனி, நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (64), இவருடைய தாயார் அம்ச வாணி (82), இவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்து வந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலையில் தூங்கும் போது, அருகில் கொசுவர்த்தி சுருள் கொளுத்தி வைத்து படுத்து இருந்தார். அப்போது, கொசுவர்த்தி சுருள் தீப்பொறி அம்ச வாணி போர்த்தி இருந்த போர்வையில் பட்டு தீப்பிடித்தது. இதை அம்சவேணி முதலில் கவனிக்கவில்லை.
இந்த நிலையில், போர்வை மற்றும் சேலை எரிந்து அவரது உடலில் தீப்பிடித்தது. இதில் பலத்த தீக்காயமடைந்த அம்சம் வாணியை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.