கோவையில் காவல் நிலையம் எதிரே போடப்பட்டுள்ள தடுப்பால்; போக்குவரத்து இடையூறு என பொதுமக்கள் குமுறல்

கோவை: கோவை அருகே உள்ள சூலூர் காவல் நிலையம் திருச்சி பைபாஸ் ரோட்டின் மேல் உள்ளது. பொதுமக்கள் காவல் நிலையத்தை கடந்து செல்லும் பொழுது மெதுவாக செல்ல வேண்டும் என்பதற்காக தடுப்பு (பேரிகார்டு) வைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை அருகே உள்ள சூலூர் காவல் நிலையம் திருச்சி பைபாஸ் ரோட்டின் மேல் உள்ளது. பொதுமக்கள் காவல் நிலையத்தை கடந்து செல்லும் பொழுது மெதுவாக செல்ல வேண்டும் என்பதற்காக தடுப்பு (பேரிகார்டு) வைக்கப்பட்டுள்ளது.

சாலையில் வரக்கூடிய சிறிய மற்றும் பெரிய கனரக வாகனங்கள் அந்த வழியாக செல்லும் பொழுது, அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காவல் நிலையத்திற்கு மனு கொடுக்க செல்லக்கூடிய பொதுமக்கள் நீண்ட நேரம் சாலை ஓரத்தில் காத்திருக்க வேண்டியதாக உள்ளதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை இருசக்கர வாகனங்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி காவல் நிலையத்துக்கு எதிரே உள்ள பேரிகார்டு கடப்பதற்கு 15 நிமிடங்களுக்கு மேலானது. பின்பு, அங்குள்ள காவலர்கள் வந்து அந்த தடுப்பை அகற்றி அந்த கனரக வாகனம் செல்வதற்கு உதவியுள்ளனர்.

அதனால், பொதுமக்கள் உடனடியாக அந்த தடுப்பை நிரந்தரமாக அகற்றிவிட்டு, அதற்கு பதில் வேகத்தடை வைத்துக்கொள்ளலாம், என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...