கோவையில் வெவ்வேறு சம்பவங்களில் இளம் பெண் உட்பட 6 பேர் தற்கொலை..!

கோவை: கோவையில் வெவ்வேறு சம்பவங்களில் இளம் பெண் உட்பட 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.


கோவை: கோவையில் வெவ்வேறு சம்பவங்களில் இளம் பெண் உட்பட 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை கிணத்துக்கடவு சென்றாயன் பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பவளக்கொடி (35). பவளக்கொடிக்கும் அவரது மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது, சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டதால், மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரமடை கருப்பராயன் நகரைச் சேர்ந்தவர் ரங்கராஜன் (31), கூலித்தொழிலாளி. இவரது குடிப்பழக்கம் காரணமாக, குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில், மனவேதனை அடைந்த அவர் வீட்டில் சனி பவுடரைக் குடித்து மயங்கி விழுந்தார். மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை செங்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதன் (28), இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக, பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். ஆனால், குணமடையாததால், விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெ. நா பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை வடமதுரை ஈஸ்வர் நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் (27) தனியார் கம்பெனி ஊழியர். குடும்பத்தகராறு காரணமாக விரக்தியடைந்த அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணத்துக்கடவு பாரதி நகரைச் சேர்ந்தவர் ராமன் (81), கூலித்தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமனின் அண்ணன் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனால், அவர் மன வேதனையுடன் இருந்து வந்தார். நேற்று விரக்தி அடைந்து வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார் இதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் ராமன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அம்மன்குளம் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (36), இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, கிறிஸ்டோபர் கடந்த இரண்டு மாதங்களாக தனியாக வாழ்ந்து வந்தார். இதனால், மனவேதனை அடைந்த அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு இது விசாரணை நடத்தி வருகின்றனர். அனைத்து காவல் நிலையத்தின் கீழ் 174 மட்டும் 176 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...