கோவை காந்திபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி சரக்கு ஆட்டோ மற்றும் செல்போனை திருடிச் சென்ற இளைஞர்கள் இருவர் கைது!

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி சரக்கு ஆட்டோ மற்றும் செல்போனை திருடிச் சென்ற இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி சரக்கு ஆட்டோ மற்றும் செல்போனை திருடிச் சென்ற இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சாய்பாபா காலனி, வேலாண்டி பாளையத்தைச் சேர்ந்தவர் சேர்ந்தவர், மலையாண்டி (42), இவர் தனியார் பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும், இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்துள்ளார்.

இந்நிலையில், இவர் நேற்று அதிகாலை கோவை 100 அடி ரோடு அருகே ஆட்டோவை நிறுத்தி விட்டு டீ குடித்துள்ளார். பின்னர் ,அவர் புறப்பட்டபோது இரண்டு பேர் லிப்ட் கேட்டு உள்ளனர். அதிகாலை நேரம் என்பதால் மலையாண்டி பரிதாபப்பட்டு லிப்ட் கொடுத்துள்ளார்.

பின்னர், ஆட்டோ புறப்பட்ட போது அவர்கள் 2 பேரும் மலையாண்டியை மிரட்டி செல்போனை பறித்து விட்டு, அவரை கீழே தள்ளிவிட்டு விட்டு ஆட்டோவை திருடிச் சென்றனர். இதுகுறித்து உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக ரோந்து போலீசார் ஆட்டோ நம்பரை வைத்து வாகன தணிக்கை செய்தனர். அப்போது மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபா காலனி, அருகே ஆட்டோ வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மேலும், ஆட்டோவை திருடிய கோவை வெங்கடாபுரம் சதீஷ்குமார் (20), வாசுதேவன் (19) ஆகிய 2 பேர் மீது போலீசார் 394, 379 திருட்டு மற்றும் வழிப்பறி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும், ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...