கோவையில் மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்த மருமகள் கைது

கோவை: கோவையில் மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்த மருமகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்த மருமகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை ஜக்கர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 55), கூலித்தொழிலாளி. இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணம் அவரது மருமகள், மீனா தான் என அவர் நெகமம் போலீசில் புகார் தெரிவித்திருந்தார்.

இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், மாமனார் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று, மீண்டும் தகராறு ஏற்பட்ட போது, மீனா கிருஷ்ணசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதில் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமி, இது குறித்து நெகமம் போலீசில் புகார் தெரிவித்தார். விசாரணைக்கு பின்னர் போலீசார் 506 (2) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மீனாவை கைது செய்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...