கோவை வடவள்ளியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; இருவர் கைது

கோவை: கோவையில் ரேஷன் அரிசியை கடத்தி குடோனில் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸார், குடிமைப்பொருள் அதிகாரியிடம் அரிசி மூட்டைகளை ஒப்படைத்தனர்.

கோவை: கோவையில் ரேஷன் அரிசியை கடத்தி குடோனில் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸார், குடிமைப்பொருள் அதிகாரியிடம் அரிசி மூட்டைகளை ஒப்படைத்தனர். 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை, செல்வபுரம், வடக்கு ஹவுசிங் யூனிட், டிக்சன் என்பவருடைய மகன் மில்டன் ராஜ் (வயது 39), இவர் வடவள்ளி, பெரிய தோட்டம் காலனி, திம்மையா நகரில் குடோனை 8100 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து, அதில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பதாக வடவள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, வடவள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் நள்ளிரவில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது, அந்த குடோனில் 7 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து மில்டன் ராஜ் (39), மற்றும் அவருக்கு துணையாக ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வேடப்பட்டியை சேர்ந்த முருகக் கனி (39), மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். 

அதனை தொடர்ந்து குடிமைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ரேஷன் அரிசி மற்றும் குற்றவாளிகள் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...