கோவை: கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (26), தனியார் நிறுவன ஊழியர். இவர், அதே பகுதியில் தெரிந்தவர்களுடன் அறை எடுத்து தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று, அறையில் இருந்த பிரபாகரனின் இரண்டு பவுன் தங்க செயின் திடீரென மாயமானது. அதிர்ச்சி அடைந்த அவர் அறை முழுவதும் தேடிப் பார்த்தார், ஆனால், கிடைக்கவில்லை. இதையடுத்து, அவர் பீளமேடு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிரபாகரனின் அறையில் தங்கியிருந்த நாமக்கல்லைச் சேர்ந்த பெரியசாமி (21) (இவரது நண்பர்) என்பவர் நகை மாயமானது முதல் அறைக்கு வராமல் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வந்த நிலையில், காளப்பட்டி பகுதியில் வைத்து பிடித்தனர்.
அப்போது, அவர் பிரபாகரனின் நகையை திருடியது ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் பெரியசாமியை 379 சட்ட பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.