வேல் யாத்திரையை தடை செய்ய வலியுறுத்தி கோவையில் அனைத்து அமைப்புகள் சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்!

கோவை: வேல் யாத்திரையை தடை செய்ய வலியுறுத்தி கோவையில் அனைத்து அமைப்புகள் சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.


கோவை: வேல் யாத்திரையை தடை செய்ய வலியுறுத்தி கோவையில் அனைத்து அமைப்புகள் சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.



பாஜக தமிழக மாநில தலைவர் எல்.முருகன் நடத்தும் வேல் யாத்திரைக்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இருப்பினும் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி வேல் யாத்திரையானது நடைபெற்று வருவதற்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில், வேல் யாத்திரைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தும் இந்த யாத்திரை நடப்பதை அனுமதியளித்துள்ள தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்தும் கோவையில் அனைத்து அமைப்புகள் சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதி தமிழர் பேரவை உட்பட 18 அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாக வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து தமிழக அரசை கண்டித்தும் காவல்துறையினரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் இந்த யாத்திரையானது ஆன்மீக யாத்திரை அல்ல, அரசியல் யாத்திரை என்றும் இந்த யாத்திரையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் பேசுகையில், பாஜக நடத்திவரும் இந்த வேல் யாத்திரை ஆன்மிக யாத்திரை அல்ல, அரசியல் யாத்திரை என்று உயர்நீதிமன்றம் தடை விதித்தும் கூட பத்து நாட்களாக இந்த யாத்திரையானது நடைபெற்று வருகிறது என்றும் இந்த யாத்திரையின் ஒவ்வொரு பொது கூட்டங்களில் பேசும் பாஜக மாநில தலைவர் அரசியல் கட்சிகளை விமர்சித்துப் பேசி வருகிறார். அதன் பின்னர் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு, கைது என்ற ஒரு நாடகத்தை நடத்துவதாக கூறினார்.

அதேபோல, வைரஸ் தொற்று காலத்தில் கூட்டம் சேரக்கூடாது என்று கூறியிருக்கும் நிலையில், இவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை திரட்டி பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர் என தெரிவித்த அவர், பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் தமிழகத்திலும் இந்தியாவிலும் ஏற்பட்டிருக்கின்ற வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற மக்களின் துயரங்களை மறைப்பதற்காக இந்த யாத்திரை நடத்தி வருகின்றார்கள் என்றார்.

விவசாயிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்களை மறைப்பதற்காகவும், கல்வி உரிமைகளை பறித்த பாஜகவின் செயல்களை மறைப்பதற்காகவும் ஹிந்தியை தமிழகத்தில் திணிப்பதை மறைப்பதற்காகவும் இந்த யாத்திரையை நடத்தி வருகின்றனர் என்று கூறினார்.

மேலும், கோவையில் நாளை பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு காவல்துறை அனுமதித்துள்ளனர். இதை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாக கூறிய அவர், இதனை கண்டித்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...