கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (34). இவர், கோவை பெரியநாயக்கன்பாளையம் ரோட்டில், எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர் சேவை மையம் நடத்தி வருகிறார்.

கடந்த சில மாதங்களாக கிருஷ்ணன் வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுத்து வரும் வயதானவர்களுக்கு உதவி செய்வது போல அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்து வந்துள்ளார். மேலும், வங்கி பணம் செலுத்த வருபவர்களிடம் பணத்தை பெற்று அந்த பணத்தை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்து வந்தார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு வாடிக்கையாளர்கள் பெ.நா பாளையத்திலுள்ள எஸ்.பி.ஐ வங்கி மேலாளரிடம் புகார் தெரிவித்தனர். அவர், இதுகுறித்து பெ.நா பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் 2 லட்சத்து இருபத்தி எட்டாயிரத்து 31 ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, கிருஷ்ணன் மோசடி செய்த பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாக கூறினார். முதற்கட்டமாக, அவரிடமிருந்து 154 ஏ.டி.எம் கார்டுகள் ரூபாய் ஒரு லட்சம் பணத்தை பெற்று, வாடிக்கையாளர்களிடம் போலீசார் வழங்கினர். மீதமுள்ள, 2 லட்சத்து 28 ஆயிரத்து 36 பணத்தை அவர் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால், போலீசார் கிருஷ்ணனை இன்று கைது செய்து முதலீட்டாளர் நல நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.