கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் விழா!

கோவை: கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெற்றது.



கோவை: கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் அமைந்து உள்ள ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை அன்று வேள்வி மாதத்துடன் பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு விரதத்தை தொடங்கினர்.



தொடர்ந்து ஆறாவது நாளான இன்று சூரனை வதம் செய்யும் நிகழ்வானது மருதமலை திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது.



முன்னதாக, அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து சுப்பிரமணிய சுவாமி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், வீரபாகு வெள்ளை குதிரை வாகனத்திலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

முன்னதாக, ஒரு மணியளவில் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வருவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அதேபோல, இன்று அதிகாலை முதல் மூகூர்த்த நாள் என்பதால் ஏரானமாவரகள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.



இருப்பினும் கொரோனா எதிரொலி, அரசு உத்தரவு படி சூரசம்ஹாரம் விழா பக்தர்கள் இன்றி நிறைவடைந்தது.

மேலும், நாளை நடைபெற உள்ள திருக்கல்யாணம் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை எனவும் காலை 10 மணிக்கு மேல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...